கனடிய வரலாற்றில் இடம் பெற்ற மாபெரும் தங்கக் கொள்ளைச் சம்பவங்களில் ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது.
சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தங்கம் இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டொரன்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தங்க சுரங்கத்திலிருந்து கொண்டு வரப்படும் தங்கம் போக்குவரத்து செய்யப்படும் போது இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
ஒன்றாறியோ மாகாணத்தின் தங்கச்சுரங்கங்களில் இருந்து கொண்டு வரப்படும் தங்கம் இவ்வாறு போக்குவரத்து செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 17ஆம் தேதி சுமார் 20 மில்லியன் கனடிய டாலர்கள் பெறுமதியான தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட தங்கம் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் இடம் பெற்ற மாபெரும் தங்க கொள்ளை சம்பவங்களில் இதுவும் ஒன்று என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தங்க கொள்ளை சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பீல் பிராந்திய போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் அரிதான சம்பவம் என பீல் பிராந்திய போலீஸ் பரிசோதகர் ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.
சுமார் ஐந்து சதுர அடி அளவிலான பெட்டி ஒன்று களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் எவ்வளவு எடை கொண்ட தங்கம் காணாமல் போனது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடவில்லை.
இந்த தங்கம் அடங்கிய பெட்டி எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது பற்றியோ அல்லது இது எங்கு கொண்டு செல்லப்படவிருந்தது என்பது பற்றிய விவரங்களோ வெளியிடப்படவில்லை.
திட்டமிட்ட கொள்ளை கூட்டம் ஒன்று இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்