களுத்துறையின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
வாதுவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை (வடக்கு/தெற்கு), மொரந்துடுவ, பேம்புவல, பிலமினாவத்தை, தர்கா நகரம், பெந்தோட்டை,, அளுத்கம, களுவாமோதரை மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
குறித்த பகுதிகளில் எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையான ஒன்பது மணி நேரங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.
களுத்துறை அல்விஸ் பிளேஸ் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.