தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்துடன் எவ்வித கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அமைச்சுப் பதவிகள் பற்றியோ அல்லது வரப்பிரசாதங்கள் குறித்தோ அரசாங்கத்துடன் நான் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய அரசாங்கம் மற்றும் பிரதமர் பதவி பற்றியும் பேசவில்லை. இருந்தும் அரச தரப்பால் திட்டமிட்ட அடிப்படையில் போலிப் பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள் விலைபோகமாட்டார்கள், சூதாட்ட அரசியலில் சிக்க வைக்கவும் மாட்டார்கள் எனவும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.