குடியேற்றம் அல்லாத விசா ( Non-immigrant ) விண்ணப்பப்படிவ செயலாக்க கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
மே மாதம் 30ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், இந்த கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
பரிமாற்ற வருகையாளர் விசா (Exchange Visitors Visa, வருகையாளர் விசா (Tourist Visa) மற்றும் மாணவர் விசா (Student Visa) போன்ற விசாக்களுக்கு 160 அமெரிக்க டொலர்களிலிருந்து 185 அமெரிக்க டொலர்களாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.