வவுனியாவில் இருந்து பூவரசன்குளம் சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி பெண் மீதும் அவருடைய தாயார் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தி நகை மற்றும் பணத்தை வழிப்பறி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (18) தெரிவித்தனர்.
கர்ப்பிணிப் பெண் மற்றும் தாய் வைத்தியசாலையில்
புத்தாண்டு தினத்தன்று இரவு 8.30 மணியளவில் வவுனியாவில் இருந்து பூவரசன்குளம் நோக்கிச் மோட்டர் சைக்கிளில் சென்ற 8 மாத கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது தாயார் மீது பம்மைமடுப் பகுதியில் வைத்து வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் அவர்கள் அணிந்திருந்த 6 அரைப் பவுண் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் காசு என்பன கொள்ளையிடப்பட்டிருந்தன.
சம்பவத்தில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் தாய் ஆகியோர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பூவரசன்குளம் பொலிசார் 30 வயதுடைய இளைஞர் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணைகளின் பின் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.