கிளிநொச்சியில் உள்ள ஒரு அரச திணைக்களத்தில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகிருந்தன.
இது குறித்து முகநூலில் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது,
ஊழல் ஆவணங்களை நீர்த்துப்போகச் செய்ய 4 மில்லியன்?
கிளிநொச்சியில் உள்ள ஒரு அரச திணைக்களத்தில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்ட கணக்காய்வு அவதானிப்பு அறிக்கை மற்றும் ஆரம்ப புலன்விசாரணை அறிக்கை என்பன வெளிக்கொண்டுவரப்பட்டன.
இதன் பின்னர் குறித்த விடயம் தொடர்பில் மத்திய அரசின் நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்தது. குறித்த அறிககையினை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரிய போது உரிய தரப்பினருக்கு பொறுப்பாக மகாண மட்டத்தில் உள்ள தரப்பினர் தகவல் அறியும் ஆணைக்குழுவின் ஆலோசனையை பெற்றுவிட்டு தருவதாக பதில் வழங்கியிருந்தனர். ( இப்படியொரு நடைமுறை சட்டத்தில் இல்லை)
இதற்கு எதிராக தற்போது ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருக்கின்றேன். இது இவ்வாறிருக்க குறித்த நிறுவனத்திலிருந்து இடம்மாற்றம் பெற்றுச் சென்ற கணக்காளர் ஊடாக மத்திய அரசின் கீழ் செயற்படுகின்ற நிறுவனத்தின் உத்தியோகத்தர் ஒருவருக்கு வவுனியாவில் வைத்து 40 இலட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டுள்ளது.