திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத சமூகத்தை சேர்ந்தவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
இவ்வாறான ஓர் சம்பவம் கடந்த 6 ஆம் திகதி திருகோணமலை நகரை அண்மித்துள்ள திருக்கடலூர் பகுதியில் இடம்பெற்றதாகவும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
திருகோணமலை, திருக்கடலூர் பகுதிக்குள் கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னதாக தமிழர்களை விரட்டியடித்துவிட்டு அத்துமீறி சிங்களவர்கள் குடியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி குறித்த பகுதியில், தமிழர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெற்று வருவதுடன், சிங்களவர்களால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாகவும் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
இதனால், தமிழ்மக்கள் பலர் காயமடைந்துள்ளதுடன், வீடுகள் பலவும் சேதமடைந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.