திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொது சந்தையில் தமிழ் சிங்கள புத்தாண்டுக்காக கொண்டுவரப்பட்ட மரக்கறிகளின் விலை குறைந்து காணப்பட்டாலும் மக்களிடம் பணமில்லை என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், திருகோணமலை நகரம், மூதூர், தம்பலாகாமம் போன்ற பகுதிகளில் மக்கள் சனக்கூட்டங்களை அவதானிக்க முடிகின்றது.
தமிழ் சிங்கள புத்தாண்டு களைகட்டும் இந்த நிலையில் துணிகள் அதிக விலையில் விற்கப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் ரம்சான் பெருநாள் பண்டிகைகள் வருவதால் மக்களின் பொருட்கள் கொள்வனவுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
மக்களிடம் பெருமளவு பணம் இல்லாவிட்டாலும் கடைகளின் சனக் கூட்டங்கள் நிறைந்து வழிகின்றன.