கும்பக்கோணத்தில் உள்ள தங்களது குலதெய்வ வழிபாட்டிற்கு சென்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஆகியோரை சாமி கும்பிட விடாமல் தொந்தரவு செய்த ரசிகர்களிடம் ஆவேசமாக கத்தியிருக்கிறார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் நடிகையாகவும் இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா நாளடைவில் டாப் நடிகையாக மாறிவிட்டார். சினிமாவில் சில காதல்கள் ஏற்பட்டும் கருத்து வேறுபாடு காரணமாக அனைத்தும் பிரிவில் முடிந்தது.
பிறகு எல்லாக் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து சினிமாவில் மாத்திரம் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
தற்போது தனது பிள்ளைகளுக்காக சினிமாவில் இருந்து விலகுவதற்கு முடிவெடுத்திருக்கிறார்.
ரசிகர்களிடம் காட்டம்
இந்நிலையில் நேற்று கும்பகோணத்தில் இலிருந்து அடுத்த தாராசுரம் பகுதியில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.
அப்போது சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது வெளியில் சிலர் அடுத்தடுத்து போட்டோ எடுத்துக்கொண்டிருந்தனர். இது இப்படியே தொடர்ந்துக் கொண்டே போக கடுப்பான நயன்தாரா வெளியில் சென்று “வாங்க உள்ள வாங்க, சாமி கும்பிட தானே வந்திருக்ககோம் நாங்களும்”என்று ஆவேசத்துடன் சத்தம் போட்டு இருக்கிறார்.
பிறகு திருச்சி ரயில் நிலையத்திற்கு சென்ற வேளையில் நயன்தாராவின் ரசிகர்கள் பலர் செல்போனில் படம் எடுத்துக் கொண்டனர். அப்போது நயனுடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்த போது “இன்னோரு தடவ போட்டோ எடுத்தா செல்போனை உடைத்துவிடுவேன்” எனவும் கடுமையாக எச்சரித்திருந்தார்.