பாண்டவர் இல்லம் அனு தன்னுடைய மகனின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சின்னத்திரை பயணம்
பிரபல தொலைக்காட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பாகிய சீரியல்களில் டாப்பில் இருக்கும் சீரியல் தான் பாண்டவர் இல்லம்.
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரிசிகள் மத்தியில் இடம்பிடித்தவர் தான் நடிகை அனு சுபாஷ்.
இவர் இந்த சீரியல் மட்டுமல்ல பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
காதல் திருமணம் செய்து கொண்ட பல ஆண்டுகள் கழித்து கர்ப்பம் தரித்த நிலையில், அழகிய ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளார்.
குழந்தையின் முகத்தை காட்டிய பிரபலம்
இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனு, பிரசவத்திற்கு என்ன கஷ்டப்பட்டார் என்பதை குறுகிய வீடியோவாக எடுத்து அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அந்த வகையில் குழந்தையின் முகத்தை முதல் முறையாக புகைப்படத்துடன் வெளியிட்டு ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த அனுவின் ரசிகர்கள், “குழந்தை அப்படியே அம்மா மாதிரி” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.