யாழ்ப்பாணத்தில் நாளை(06) முதல் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரத்தினம் தெரிவித்துள்ளார்.
நாளை காலையில் இருந்து 10 ரூபா விலைக் குறைப்பு நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி பொருட்களின் விலைகள் குறைக்கப்படாது என ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் அதிரடியாக பாணின் விலையைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.
அதன்படி எதிர்காலத்தில் கோதுமை மா, நல்லெண்ணெய் மற்றும் முட்டையின் விலை குறையும் பட்சத்தில்,பேக்கரி பொருட்களின் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள நிலையில், கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.