உணவு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் புதிது புதிதாக வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது.
அப்படி பல வகையான குழம்பு வைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். அந்தவகையில், இன்று வத்தக்கொழும்பு எப்படி வைப்பது என்று இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சுண்டக்காய் – 1 கப்
- வெந்தயம் – 2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
- துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
- மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
- மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- வரமிளகாய் – 4
- புளி – 75 கிராம்
- சின்ன வெங்காயம் – 10
- வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
- அரிசி – 1 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- கடுகு – 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
- கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து சூடானதும் அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.
அதே கடாய்யில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
மற்றொரு கடாய் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து, அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பொருட்களை ர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும்.
5, 6 கொதி வந்தவுடன் அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், வத்த குழம்பு ரெடி.