சுமத்ரா தீவுகளுக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு கிடையாது என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிலநடுக்கம் இந்தோனேஷியா – சுமத்ரா தீவுகளுக்கு அருகில் 6.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
இந்த நிலநடுக்கம் சுமார் 72 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.