பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரம ரத்னவின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான பத்திரத்தை மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். இந்நிலையிலேயே அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
அமைச்சரவை அனுமதி
அதேவேளை பொலிஸ் மா அதிபர் சீ.டீ விக்ரமரத்னவுக்கு 60 வயது நிறைவடையும் நிலையில் அவர் கடந்த மார்ச் 26 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் செல்லவிருந்தார்.
இந்நிலையில் அவரது சேவையை மேலும் மூன்று மாத காலங்களுக்கு நீடிக்கவே அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில், எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு பொலிஸ் மா அதிபர் பதவியை அவர் வகிப்பார் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.