உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராகத் தோற்றிய அரச அதிகாரிகளின் அடிப்படைச் சம்பளத்தை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தேர்தலில் 3000 அரச உத்தியோகத்தர்கள் வேட்பாளர்களாக களமிறங்குவதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.
அத்தோடு தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் அடிப்படை சம்பளம் வழங்கப்படும் என்றார்.
மேலும் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.