மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவ மௌனம் காப்பது நல்லது. சுய தொழிலில் பணரீதியான பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகன பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மேன்மை உண்டாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரக்கூடும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத சறுக்கல்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மிடுக்குடன் செயல்படுவீர்கள். உங்களுடைய நயமான பேச்சு எதிர்பார்த்த விஷயத்தை பெற்றுத்தரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் போட்டியாளர்களை எதிர்த்து போராடுவீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி சாதக பலன் தரும். குடும்ப ஒற்றுமையில் குறை இருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்ததை விட போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மை தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தவற்றை அவ்வளவு எளிதாக அடைய முடியாது. கருணை குணம் கொண்ட உங்களுக்கு நன்மைகள் பல நடக்கப் போகிறது. சுய தொழிலில் எதிர்பாராத விஷயங்களை காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அனுசரிப்பு தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன உளைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. கண்டதையும் மனதில் போட்டு அழுத்திக் கொள்ளாதீர்கள். வருவது வரட்டும் என்று விட்டு விடுங்கள். சுய லாபம் காண மற்றவர்களை ஏமாற்ற வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் தொல்லைகள் கொடுப்பர்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி உறவில் இருக்கக்கூடிய நெருக்கம் அதிகரிக்கும். சமூக சிந்தனை அதிகரித்து காணப்படும். சுய தொழிலில் புதிய தேர்வுகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பயணங்களால் பயனடைய கூடும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கப்போகிறது. எதையும் பெரிதாக நினைக்காதீர்கள். சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வருமானம் உயர பாதைகள் தெரியும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பொறுப்புடன் இருப்பது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல பலன் தரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எடுத்ததெல்லாம் வெற்றியாக கூடிய அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினருடைய ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வார்த்தைகளில் கவனமுடன் இருப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதிற்கு பிடித்தவர்களிடமிருந்து நல்ல செய்திகளை பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். பகைவர்களின் எண்ணிக்கையும் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுமூகமான சூழ்நிலை காண்பர்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப உறவுகளை விட்டுக் கொடுக்காதீர்கள். வெளியிடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் அடுத்தவர்களுடைய வேலையையும் சேர்த்து செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கற்பனை வளம் அதிகரித்து காணப்படும். உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். உற்றார் உறவினர்களுடைய ஆதரவு பெருகும். சொந்த முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் கிடைக்கும்.