மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. நீங்கள் நினைத்ததை தடை இல்லாமல் நடத்திக் காட்டலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நற்பலன் இருந்தாலும் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களால் உபத்திரவம் உண்டாக்கலாம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தீராத பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு உரிய புதிய பாதைகள் தென்படக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களிடம் பணம் புழங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து மந்த நிலை மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நற்பெயர் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதல் ஒத்துழைப்பு கொடுப்பீர்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய வேலையை மட்டுமல்லாமல் மற்றவர்களுடையதையும் சேர்த்து இழுத்து போட்டு செய்ய வேண்டி இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். சுய தொழிலில் அதிக லாபம் காண புதிய யுத்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக போட்டியாளர்கள் நட்பு பாராட்டுவர்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சல் மிகுந்த செயல்களால் மற்றவர்களிடம் எளிதாக பாராட்டுகளை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன அமைதி இருக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பேச்சில் இனிமை உண்டாகும். கணவன் மனைவிக்குள் அன்னோனியம் கூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் மூலம் அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அலைச்சல் டென்ஷனை கொடுக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய எண்ணங்கள் ஈடேறக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பேச்சு வார்த்தைகளை பற்றி வெளியில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்தது பூர்த்தி அடைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. பண வரத்துகளில் கால தாமதம் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் போட்டியாளர்களை சமாளிக்க வேண்டி இருக்கும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுமை தேவை. எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கைவிடாதீர்கள். நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு குழப்பங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடக்கும். குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த இழுப்பறி குறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப விஷயங்களில் மற்றவர்களை தலையிட அனுமதிக்காதீர்கள். சுய முடிவுகள் எடுப்பது நல்லது. பெரியவர்களை மதித்து நடந்து கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மனதிற்கு பிடித்தவர்களின் சந்திப்பு அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன்கோபத்தை குறைப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முயற்சி செய்வீர்கள். குடும்ப அமைதிக்கு விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் எதிர்பாராத லாபத்தை காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு உரிய செலவுகளும் வரும்.