டிரை ப்ரூட்ஸ் வகைகளில் ஒன்றான பாதாம் உடலுக்கு தேவையான பல ஆரோக்கியமான சத்துக்களை கொண்டுள்ளது.
இதுவரை பாதாமை அன்றாடம் சாப்பிடம் பழக்கம் இல்லாதவர்கள் இனி வரும் காலங்களில் தினமும் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளவது நல்லது என்று கூறப்படுகிறது.
இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எளிதில் குறைக்கிறது. இதன் மூலம் மாரடைப்பு அபாயமும் குறைகிறது.
கால்சியம் கிடைக்கும்
உடலில் கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் உணவில் பாதாமை சேர்த்துக்கொள்ளுங்கள். நல்ல அளவு ஊட்டச்சத்து கூறுகள் நிறைத்திருக்கும் பாதாம் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் குறைபாட்டை தடுக்கலாம். கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகளும் நீங்கும்.
உடல் எடை குறையும்
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு பாதாம் ஒரு வரப்பிரசாதம் என்று கூறப்படுகிறது. இதை உட்கொள்வதன் மூலம் எடை படிப்படியாக குறையும். முடிந்தால் ஊறவைத்து உட்கொள்ளலாம். இதன் மூலம் அதிகளவான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
புற்றுநோயைத் தடுக்கும்
புற்றுநோயை கண்டு அஞ்சுபவர்கள் பாதாம் போன்ற உலர்ந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது புற்றுநோயிலிருந்து விலக்கி வைக்கும்.
சர்க்கரை கட்டுபாடு
சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பாதாம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
இதுவரை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடாமல் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையுடன் இதை உட்கொள்ளலாம்.