இந்த மாதத்திற்குள் 10 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. திஸாநாயக்க (S.B Dissanayake) தெரிவித்தார்.
‘எப்போது அமைச்சராகப் போகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“விரைவில் எனக்கு அமைச்சுப் பதவி கிடைக்கும். இப்போது இருக்கும் அமைச்சரவையைத் திருத்தி நல்லதோர் அமைச்சரவையை அமைக்கும் தேவை ஜனாதிபதி ரணிலுக்கு உண்டு.
இப்போது இருக்கின்ற அமைச்சரவை அங்கும் இங்குமாக எடுத்து நிரப்பியது. என்னை அமைச்சராக நியமித்தால் எடுத்து வேலை செய்வேன்.
அபிவிருத்தி செய்யக்கூடிய அமைச்சாக இருந்தால் நல்லது. அப்படிப்பட்ட அமைச்சு மீதுதான் எனக்கு விருப்பம் அதிகம். 10 புதிய அமைச்சர்கள் இந்த மாதம் நியமிக்கப்படுவார்கள்” – என்றார்.