இலங்கையில் ஒரு வாரத்தில் தங்கம் ஒரு பவுன் விலை சுமார் 39,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்தார்.
அடகு கடைகளில் நெருக்கடி
உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்துள்ளதன் காரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதேவேளை தங்கம் விலை குறைவால், நகைக்கடைகள், தங்க அடகு கடைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை மத்திய வங்கி நேற்றைய தினம் ஒரு டொலர் ஒன்றின் கொள்முதல் விலை ரூ.307.36 பதிவாகியிருந்ததுடன் விற்பனை விலை ரூ.325.52 ஆக பதிவாகியுள்ளது.