மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உறவினர்களின் ஆதரவு கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் சுப பேச்சுகள் நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த விஷயத்தில் சாதக பலன் உண்டு.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத பண வரவு காத்திருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகளை மெதுவாக பேசி தீர்ப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பலவீனம் வெளிப்படக்கூடிய அமைப்பாக இருக்கிறது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத உதவிகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. அரசு வழி காரியங்களில் அனுகூல பலன் தரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சொல்லும் சொல்லின் மூலம் பிரச்சனைகள் வரலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் நிம்மதி இருக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத சங்கடங்கள் நிகழ வாய்ப்புகள் உண்டு. வெளியிட பயணங்களின் பொழுது கவனம் வேண்டும். கணவன் மனைவி உறவில் புரிதல் ஏற்பட வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். சாதகமற்ற அமைப்பு என்பதால் வாக்கு சுத்தம் தேவை. பெற்றோர்களுக்கு மதிப்பு கொடுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பெயர் கெட்டுப்போக வாய்ப்பு உண்டு கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி வெளியில் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதுப்பாதைகள் தென்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அலைச்சல் அதிகம் இருக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் எதிர்பாராத சிக்கல்கள் வரக்கூடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையான ஓய்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் உயரும் வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்
: விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகம் தரும் நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் எதையும் முன் நின்று நடத்துவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நெருங்கியவர்களிடமிருந்து சில மனக்கசப்புகள் வரக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் இணைய வாய்ப்பு உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த வெறுப்புகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் வந்து செல்லும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் உதிக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஓய்வின்றி உழைக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உற்றார், உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து வரவேண்டிய பணம் வசூல் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இழந்தது மீண்டும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தகாத நண்பர்களின் சேர்க்கையால் சிக்கல்களை சந்திக்கலாம். கணவன் மனைவி உறவில் விரிசல் விழலாம் கவனம் வேண்டும். சுய தொழிலில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பேச்சில் சாதுரியம் தேவை.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் நயமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த தீராத பிரச்சனை ஒன்று தீரப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் விவாதங்கள் வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பண வரவு காலதாமதம் ஏற்படும்.