இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் மகன் அமீன் பங்கேற்றிருந்த ஒரு ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இசைப்புயல் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டு வருபவர்தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
இவரின் மகன் ஏ.ஆர்.அமீனும் தற்போது பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் சொந்தமாக பாடல்கள் உருவாக்கி அதனை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றார்.
இவ்வாறான நிலையில் சமீபத்தில் ஒரு பாடல் ஷூட்டிங்கில் அமீன் பங்கேற்று இருந்தபோது, அங்கு ஒரு பெரிய விபத்து திடீரென ஏற்பட்டு இருக்கிறது. அதில் இருந்து ஏ.ஆர் ரஹ்மானின் மகன் அமீனும் மயிரிழையில் உயிர் தப்பி இருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது,
ஷூட்டிங் இடம்பெறும் இடத்தில் கிரேனில் கட்டி தொங்கவிடப்பட்டு இருந்த அலங்கார விளக்குகள் திடீரென அறுந்து கீழே விழுந்திருக்கிறது.
இதுதொடர்பில் அமீன் வெளியிட்டுள்ள பதிவில்,
“நான் நடுவில் தான் நின்று இருந்தேன். சில நொடிகள் முன் அல்லது பின்னர் அது விழுந்திருந்தால் எங்கள் தலையில் தான் விழுந்து இருக்கும். மொத்த குழுவும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை” என குறிப்பிட்டு இருக்கிறார். இவரின் இந்தப் பதிவினைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏனெனில் கடந்த சில தினங்களுக்கு முதல் தான் பாடகர் பென்னி தயாள் கலந்து கொண்டிருந்த நிகழ்ச்சி ஒன்றிலும் பறந்து கொண்டிருந்த ட்ரோன் கமரா யாருமே எதிர்பாராத நேரத்தில் திடீரென அவரது தலையின் பின்புறத்தில் வந்து பலமாக மோதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமீனும் இப்படியான ஒரு விபத்தில் சிக்க இருந்தமை ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
எனினும் எந்த ஒரு ஆபத்தும் நிகழவில்லை எனக் கூறி ரசிகர்கள் பலரும் அமீனுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.