மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபிட்சம் தரக்கூடிய நல்ல நாளாக அமைய பெறப் போகிறது. சுப காரிய பேச்சு வார்த்தைகளில் திருப்தி உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுகம் காணக்கூடிய அமைப்பாக இருப்பதால் நினைத்தது நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மை தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மன இறுக்கம் தளர கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இரட்டிப்பு லாபம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் குறுக்கு வழியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையும். குடும்ப செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நாள் புன்னகை நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட இருக்கிறீர்கள். குடும்பத்தில் சுப பேச்சு வார்த்தைகள் நடக்கக்கூடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நிலுவையில் இருக்கும் கடன்கள் வசூல் செய்யப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட கால திட்டம் ஒன்று கைகூடும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்துணர்ச்சியுடன் இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் உணர்ச்சிவசமான பேச்சு வார்த்தைகள் தவிர்த்துக் கொள்வது நல்லது. பொறுமை கடலினும் பெரிது. சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சமூகமாக இருக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செய்யும் முதலீடுகளில் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பழைய விஷயங்கள் பற்றிய சிந்தனைகள் ஓடக்கூடிய நாளாக இருக்கப் போகிறது. எதையும் ஒளிவு மறைவின்றி பேசி விடுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தேவையற்ற தயக்கம் வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முக்கிய நபர்களை சந்திக்க கூடிய அமைப்பாக இருக்கிறது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நலன் தரும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். சுய தொழில் செய்பவர்கள் புதிய நபர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஏக்க கனவுகள் நிறைவேறும் வாய்ப்பு உண்டு.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பிரஷர் நிறைந்த அமைப்பாக இருக்கிறது. காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓட வேண்டி இருக்கும். சுய தொழிலில் லாபம் காண புதிய யுக்திகளை மேற்கொள்வீர்கள். சண்டை போட்ட நபர்களுடன் மீண்டும் நட்புறவு கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தொழில் நுட்ப அறிவு மேம்படும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. மனதில் இருக்கக்கூடிய கேள்விகளுக்கு விடை கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் பொறுப்புகளை தட்டி கழிக்காதீர்கள். தேவையற்ற ஆடம்பர பொருள் சேர்க்கை வேண்டாம். கணவன் மனைவி உறவில் அன்பு மலரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நேரம் வீண் விரயம் ஆவதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி உறவுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உறுதியான முடிவுகள் தேவை. ரெண்டாம் கெட்டானாக செயல்பட வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கொடுப்பார்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வெளி இடங்களில் கருத்து மோதல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற இடங்களில் வாக்குவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் லாபம் காண சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் பழிகள் வரக்கூடும், எச்சரிக்கை உணர்வு தேவை.