மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நினைத்ததை நடத்திக் காட்டக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே விட்டுக்கொடுத்து சொல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபம் வரக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மௌனம் பல பிரச்சினைகளை தீர்க்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் பொறுமையுடன் கையாளுவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். சுய தொழிலில் தர்மத்தை நிலை நாட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேகத்தை விட விவேகம் நல்ல பலன்களை கொடுக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வது ஏமாற்றத்தை கொடுக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தடைகள் அகலும். சுய தொழிலில் மந்தமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் தொந்தரவு கொடுப்பார்கள்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நெஞ்சில் துணிச்சல் அதிகம் இருக்கக் கூடிய நாளாக இருக்கிறது. எவரையும் எதிர்த்து எளிதாக போராடி வெற்றி பெறுவீர்கள். சுய தொழிலில் சுய லாபம் காண புதிய யுத்திகள் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டாகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முகம் பிரகாசமாக ஜொலிக்கும் நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் சுய முடிவு எடுப்பது நல்லது. சுய தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கனிவு தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனோதிடம் அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்திருப்பது நல்லது சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணியாட்கள் மூலம் தொந்தரவுகள் வரக்கூடும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் வாங்கும் யோகம் உண்டு.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். பிறருடைய விஷயங்களில் அவசியமாக மூக்கை நுழைக்காதீர்கள். சுய தொழிலில் எதிர்பாராத நஷ்டம் வரலாம், எச்சரிக்கை வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தகாத நண்பர்களால் பிரச்சனைகள் ஏற்படும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் பட்டாம் பூச்சி போல சிறகடிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே ஒற்றுமை பலப்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உற்ற நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் பொறுப்புணர்வு தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுபவம் மிக்க நல்ல நாளாக அமைய இருக்கிறது. உங்களுடைய கூட்டு தொழில் சிறப்பாக செய்து லாபத்தை காணக்கூடிய யோகம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களால் அலைச்சல் ஏற்படும். ஆரோக்கியம் கவனம் வேண்டும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சமோஜித புத்தி உங்களுக்கு கை கொடுக்கும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் அலட்சியம் தவிர்த்து பொறுப்பாக இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இல்லாவிட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் நிம்மதி இருக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உடன் இருப்பவர்களால் சில தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. உற்றார் உறவினர்களின் ஆதரவு குறையும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகைவர்களின் எண்ணிக்கை கூடும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய பாதைகள் பிறக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதிர்பாராத லாபத்தினை காணலாம். குடும்ப பிரச்சனைகளை வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுறுசுறுப்பு இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நினைத்ததை நடத்தி காட்டுவீர்கள்.