அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் சுவாரஸ்யமான சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.
மழையால் ஆட்டம் தடைபட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறையின் படி 47 ஓவர்களுக்கு 243 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் SAS அணி களமிறங்கியது.
அதன்படி இறுதி ஓவரில் SAS அணி வெற்றி பெற 4 ஓட்டங்களை பெற வேண்டியிருந்தது.
தஸ்மேனியா மகளிர் அணியின் வலுவான பந்துவீச்சால் யாரும் எதிர்பாராத வகையில் SAS அணி இறுதி ஓவரில் 5 விக்கெட்டுக்களை பறி கொடுத்தது.
குறித்த ஓவரில் SAS அணி 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்திருந்தது.
அதன்படி, இந்தப் போட்டியில் ஓரு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தஸ்மேனியா மகளிர் அணி இந்த ஆண்டுக்கான கிண்ணத்தை கைப்பற்றியது.