இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 மில்லியன் ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்களில் சில பொருட்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 4 கொள்கலன் ஒப்பனைப் பொருட்கள் இலங்கை சுங்கத்தால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தரமான தயாரிப்புகள்
இந்த கொள்கலன்கள் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், சீனா, சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், அவற்றில் சில நல்ல தரமான தயாரிப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.
இந்நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட குறித்த அழகுசாதனப் பொருட்கள் பரிசோதிக்கப்பட்டு இலங்கையின் நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் காணப்படுபவை உள்ளூர் சந்தையில் ஏலம் விடப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்