மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பண வரவு இருக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. உற்றார், உறவினர்களால் ஆதாயம் காணக்கூடிய யோகம் ஒரு சிலருக்கு அமையும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் லாபம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு உரிய செலவுகளும் வரும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வேண்டுதல்களை நிறைவேற்றக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். சுயதொழியில் உள்ளவர்களுக்கு மனதில் இனம் புரியாத உற்சாகம் தொற்றிக் கொள்ளும் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் துணிச்சலுடன் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூல பலன் தரும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நடக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தேவையற்ற அலைச்சல் வரக்கூடும் எனவே எதையும் யோசித்து முடிவு எடுப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் போகிறது. நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். அனாவசிய வார்த்தைகளை உதிர்க்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு குடும்பத்தில் ஆலோசனை கேட்டு முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை கொடுக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய முயற்சிகளில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மேலதிகாரிகளின் மூலம் டென்ஷன் ஏற்படலாம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவுக்கு ஏற்ற செலவுகள் வந்து செல்லும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்ப உறவுகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது உத்தமம். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படலாம். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை கொடுக்கும் அமைப்பாக இருக்கிறது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுத்த முயற்சிகள் பலிதமாகக் கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. மனதில் புது தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செலவுகள் அதிகரித்தாலும் சமாளிக்கக்கூடிய திறன் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தனவரவு குறையும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிரிகளின் தொல்லை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. எதிலும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது. சுய முடிவு எடுத்துக் கொண்டால் நன்மைகள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வர வாய்ப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய முதலீடுகளில் அதிக லாபம் காணக்கூடிய யோகம் உண்டு.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தொடங்கும் காரியத்தை கால தாமதம் இல்லாமல் உடனே துவங்குவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பயணத்தில் கவனமுடன் இருப்பது அவசியமாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த சிறு சிறு பிரச்சனைகள் மறையும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணக்கூடிய யோகமாக இருக்கிறது. குடும்பத்தில் புதிய விஷயங்களைப் பற்றிய கலந்தாய்வு நடக்க வாய்ப்பு உண்டு. குழந்தைகளின் கல்வி விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நண்பர்களால் ஆதாயம் காணக்கூடிய யோகம் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையக்கூடிய நல்ல நாளாக அமையப் போகிறது. தேவையற்ற டென்ஷனை குறைத்து, வருவது வரட்டும் என்கிற மனப்போக்கு மன அமைதியை கொடுக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள்.