அகலவத்தை பிரதேச வீதி ஒன்றின் மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யச் சென்ற உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் மின்சார ஊழியர்களை கல்லால் தாக்க முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தாக்குதல் நடத்த முற்பட்ட நபர் நேற்று (21) கைது செய்யப்பட்டதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
அகலவத்தை பிராந்திய மின்சார சபையினர் மின்சார கட்டணத்தை அதிகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு மின்சார ஊழியர்கள் மற்றும் அவர்களது உத்தியோகபூர்வ வாகனம் மீது குறித்த நபர் கல்லால் தாக்க முயற்சித்துள்ளார்.
இது தொடர்பில் மின்சார ஊழியர்கள் அகலவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்