இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 16ஆவது சீசனுக்கான அட்டவணை அண்மையில் வெளியானது.
இதன்படி ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு (2023) மார்ச் 31ஆம் திகதி துவங்கி மே 28ஆம் திகதி முடிய உள்ளது.
மேலும் இந்த தொடர்பில் ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணில் 7 போட்டிகளையும் வெளி மண்ணில் 7 போட்டிகளையும் விளையாட உள்ளது.
இவ்வாறான நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSk) வேகப்பந்து வீச்சாளர், நியூசிலாந்து வீரர் கைல் ஜேமிசன் ஐபிஎல் 16ஆவது சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே முதுகு வலி பிரச்சினை இருந்து வருகிறது. அதற்காக அவர் தற்போது அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 மாதங்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
இதன் காரணமாக நான்கு வீரர்கள் ஜேமிசனுக்கு மாற்று வீரராக களமிறங்க பரிசீலணையில் உள்ளனர்.
அவர்களில் இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானகவும் ஒருவர் என தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.