நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையானது வாடிக்கையாளர்களின் வசதிக்காக மின்னஞ்சல் மூலம் நீர் கட்டணத்தைப் பெறும் சேவையை ஆரம்பித்துள்ளது.
உங்கள் தண்ணீர் கட்டணத்தில் கணக்கு எண் இடைவெளி விட்டு உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் டயிப் செய்து 071-9399999 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தியை (SMS) அனுப்ப வேண்டும்.
அதன் பிறகு, உங்கள் மின்னஞ்சல் கணக்கில் வரும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள “ஏற்றுக்கொள்” என்பதைக் கிளிக் செய்த பிறகு, வாடிக்கையாளர் இ-பில் சேவையில் பதிவு செய்து கட்டணம் செலுத்துவதற்கான வசதியைப் பெறலாம்.