மினுவாங்கொடை – மொரகொடவத்தையில், நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அடையாளம் தெரியாத இருவர் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பில்லவத்தை ஆடியம்பலம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

