தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 35.9 கிலோமீற்றர் கல்லுக்கு அருகில் லொறியும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெற்கு அதிவேக வீதி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்ட 70 முதல் 75 வயதுக்கு இடைப்பட்ட இருவரே உயிரிழந்துள்ளனர்.
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறி தொம்கொட பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவ்வழியாக கொழும்பு நோக்கிப் பயணித்த கார், லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.