எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தேர்தல் விஞ்ஞாபனங்களை கட்டணமின்றி வழங்க அரச அச்சகம் மறுத்தமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.