மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன நிறைவான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய தலைக்கு மேலே நிறைய வேலை பளு இருக்கும். இருந்தாலும், அதை எல்லாம் சோர்வடைவாமல் செய்து முடித்து விடுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வருமானம் போதிய அளவு கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. தொழிலில் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் இருக்கும். நின்று போன சுப நிகழ்ச்சியை தொடங்குவதற்கு வீட்டில் பெரியவர்கள் கலந்து ஆலோசனை செய்வார்கள். வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. செலவை குறைத்துக் கொண்டு சேமிப்பை பெருக்குவது நன்மை தரும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத பாராட்டுக்கள் கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே உறவு பலப்படும். சௌகரியம் நிறைந்த நாளாக அமையும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயங்கள் நல்லபடியாக நடந்து முடியும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். சுப செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு ஏற்படும். சேமிப்பு கரையும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் எடுத்து வேலை செய்வது நன்மை தரும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அவசரம் கூடவே கூடாது. எல்லா விஷயத்திலும் நின்று நிதானமாக யோசித்து சிந்தித்து செயல்பட வேண்டும். தெரியாத புதிய விஷயங்களை செய்ய வேண்டாம். ஆழம் தெரியாமல் காலை விடுவது பிரச்சினையில் கொண்டு போய் நிறுத்தி விடும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் பேசும் பேச்சிலும், செய்யும் வேலையில் எல்லாம் அவ்வளவு ஒரு தெளிவு இருக்கும். மனக்குழப்பம் இருக்காது. அடுத்தவர்களுடைய பாராட்டை பெறுவீர்கள். அறிவுத்திறன் வெளிப்பட கூடிய நாள் இது.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் போராட்டம் நிறைந்த நாளாக இருக்கும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீங்க. முன்கோபடாதீங்க. பலமுறை முயற்சி செய்தால் தான் ஒரு வேலையில் வெற்றி கிடைக்கும். அவ்வளவுதான். இதனால் உடல் சோர்வு ஏற்படும். மனசோர்வு ஏற்படும். கவலை வேண்டாம். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் எல்லாம் சரியாக நடக்கும். எதையெல்லாம் சரியாக செய்ய வேண்டுமோ, அதை எல்லாம் சரியாக செய்து உங்களுடைய கடமைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மன நிறைவான சந்தோஷம் இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். நிறைய வேலையை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். எல்லா வேலையிலும் ஒரு பின்னடைவு தோன்றும். சில சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். யாரும் உங்களுக்கு ஆதரவாக நிற்க மாட்டார்கள். கவலை வேண்டாம் எல்லாம் ஒரு சில நாட்களில் சரியாகிவிடும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். சொல்வாக்கும் செல்வாக்கும் கூடும். வாக்கு வன்மை அதிகரிக்கும். எல்லா விஷயத்திலும் பேசிப் பேசிய ஜெயித்து விடுவீர்கள். இன்றைக்கு உங்களை ஜெயிக்க யாராலும் முடியாது. ஆனால் மனைவியிடம் மட்டும் பேசும்போது கவனமாக இருக்கணும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் அதில் விடாமுயற்சியை மேற்கொண்டு வெற்றி அடைய போராடுவீர்கள். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி ஒன்று தொலைபேசி மூலமாக வந்து சேரும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைகளும் தடங்கல்களும் நிறைந்து தான் காணப்படும். முட்டி மோதி போராடி தான் இன்றைய நாளை கடத்த வேண்டிய சூழ்நிலை இருக்கும். கூடுமானவரை மனதை அமைதி படுத்த மனதிற்குள் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். அளவோடு சாப்பிடுங்கள். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். நன்மையை நடக்கும்.