மக்கள் எம்.பிக்களுக்குத் தொலைபேசி அழைப்புக்களை எடுத்துப் பணம் தாருங்கள், பால் மா தாருங்கள், உணவு தாருங்கள் என்று கேட்கின்றார்கள் என எதிரணி எம்.பிக்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
“நாட்டின் பொருளாதார நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகின்றதாக அரச தரப்பு கூறி வருகின்ற போதிலும் நடைமுறையில் அப்படி எதையும் காணக்கூடியதாக இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மக்களுக்கு வேறு வழி தெரியவில்லை
மக்கள் உணவுக்காக அலைவதை அறியக்கூடியதாக இருக்கின்றதாக தெரிவித்த எதிரணி எம்பிக்கள், மக்கள் இப்போது அவர்கள் வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பிய எம்.பிக்களிடமே உணவு, பணம் ஆகியவற்றைக் கேட்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் எம்.பிக்களிடமே உதவி கேட்கும் அளவுக்கு மக்களுக்கு வேறு வழி தெரியவில்லை என கூறிய எதிரணி எம்.பிக்கள், அதுமட்டுமல்லாது மக்கள் சில எம்.பிக்களின் வீடுகளுக்குச் சென்றும் உணவு கேட்கின்றார்கள். கதவோரம் காத்துக்கிடக்கின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.