தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் இரத்தோட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக இன்று (13) இரவு 08.00 மணி முதல் நாளை (14) காலை 06.00 மணி வரை பல பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரத்தோட்டை, கைகாவல மற்றும் வேரகம ஆகிய பகுதிகளுக்கு 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களைக் அறிந்து கொள்ள வேண்டுமாயின் 1939 என்ற இலக்கத்திற்கு அழைத்து தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.