கடந்த அரசின் போது 140 மதத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம் கடந்த வாரம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாகனங்கள் எழுத்துப்பூர்வ ஒதுக்கீடு இன்றி பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டதாகவும், மாதத்திற்கு 250 லீட்டர் எரிபொருள் அரசினால் வழங்கப்பட்டதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், வாகனங்களை பறிமுதல் செய்வது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.