புத்தளம், தில்லையடி சதாமியாபுரம் பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இன்று மாலை இளைஞ்சர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய பொலிஸாருடன் இனைந்து வீடொன்றில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது 50 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் தில்லையடி அல்ஜித்தா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பாலாவி விமானப்படைப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாலாவி விமானப்படை புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.