மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த நன்மை நடக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். திறமைக்கு ஏற்ற பாராட்டும் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். நன்மைகள் பல நடக்கக்கூடிய இனிமையான நாள் இது.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் கூடுதல் கஷ்டம் இருக்கும். அதாவது விடாமுயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். சுலபமாக எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது. அதற்காக சோர்ந்து போக வேண்டாம். கொஞ்சம் கூடுதல் முயற்சி கூடுதல் நன்மையை கொடுத்து விடும். மற்றபடி வருமானத்தில் பிரச்சனை இல்லை. ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு முடிவையும் நிலையாக எடுக்க முடியாது. எது தவறு, எது சரி என்று யூகிக்க முடியாத அளவுக்கு சில மன குழப்பம் இருக்கும். பிரச்சினைகளை வாழ்க்கை துணையிடம் பகிர்ந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அவ்வப்போது சின்ன சின்ன குறைபாடு இருக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை பட்டவர்களுடைய கனவு நிறைவேற வாய்ப்பு உள்ளது. குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பீர்கள். இன்று நல்ல மதிய உணவு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனதும் வயிறும் நிரம்பி இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிரிகள் உடன் போராடக்கூடிய நாளாக இருக்கும். போட்டிகள் பொறாமைகளை சந்தித்து சில விஷயங்களை சாதிக்க வேண்டியதாக இருக்கும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். அனாவசிய செலவு குடும்ப பிரச்சனையை உண்டு பண்ணி விடும்.
கன்னி:
ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் தடுமாற்றம் நிறைந்த நாளாக இருக்கும். அவசர முடிவு எதுவாக இருந்தாலும் நாளை எடுக்க வேண்டாம். உங்களுடைய அன்றாட வேலையை செய்தால் போதும். எதிர்பாலின நட்பு கூடாது. குடும்ப பிரச்சனையை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள கூடாது.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மன நிம்மதியோடு ஓய்வு எடுக்கக்கூடிய நேரம் கிடைக்கும். குடும்பத்தோடு நேரத்தை சந்தோஷமாக கழிப்பீர்கள். கோவில் குளங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப ரொம்ப முக்கியமான நாளாக இருக்க போகின்றது. தொலைபேசியின் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். மன மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டம் நிறைந்த நாள் இது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் மன கஷ்டம் இருக்கும். தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றியை பெறாது. சின்ன சின்ன தோல்விகளே சந்திப்பீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். சோர்ந்து போகாதீர்கள். மனதை அமைதி படுத்த ஓம் நமசிவாய மந்திரம் சொல்லுங்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை என்றாலும் ஓய்வு இருக்காது. ஆனால் இன்று மாலை குடும்பத்தோடு நேரத்தை சந்தோஷமாக செலவழிப்பீர்கள். வெளியில் சென்று சாப்பிட்டு மணமகிழ்ச்சியாக இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நினைத்து பார்க்க முடியாத நல்ல காரியங்கள் நடக்கும். ஆனால் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கொஞ்சம் பின்னோக்கி செல்லும். சொன்ன வேலையை சொன்ன நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாமல் கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படும். பரவாயில்ல. எல்லாம் அடுத்த வார இறுதிக்குள் சரி செய்து விடுவீர்கள்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனநிறைவான நாளாக இருக்கும். இன்றைய நாள் முழுவதும் சந்தோஷமாக இருக்கப் போகிறீர்கள். வயிறுக்கு நிறைவான சாப்பாடு கிடைக்கும். ஓய்வு எடுக்கும் நேரத்தில் பழைய நினைவுகளை எல்லாம் பேசப்போகிறீர்கள். கூடவே சின்ன சின்ன ஏமாற்றங்கள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. சோர்ந்து போகாதீங்க.