மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. ரொம்ப ரொம்ப கஷ்டமான வேலையை கூட சுலபமாக முடித்து விடுவீர்கள். சந்தோஷம் நிறைந்த நாள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சந்தோஷம் தரக்கூடிய நாளாக இருக்க போகின்றது. உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்துடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன நிறைவான நாளாக இருக்கப் போகின்றது. மன அமைதி பெறுவீர்கள். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று நேரத்தை கழிக்கும் சந்தர்ப்பம் அமையும். இறைவனின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சுமாரான நாளாக தான் இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையை சுறுசுறுப்போடு செய்து முடித்தாலே நன்மை நடக்கும். சோம்பேறித்தனத்தை தள்ளி வைத்து விடுங்கள்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. யாரையும் நம்பி விடாதீர்கள். உங்களுடைய வேலையை நீங்களே செய்து கொள்ளுங்கள். உயிர்த்தோழனாக இருந்தாலும் உங்களுக்கு இன்று உதவ மாட்டான்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சங்கடங்கள் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் நன்மையை செய்தாலும் உங்களுக்கு கெட்ட பெயர் தான் கிடைக்கும். ஆகவே மூன்றாவது மனிதர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமை அவசியம் தேவை. முன் கோபப்படக்கூடாது. யாரையும் எடுத்துறிந்து பேசக்கூடாது. அமைதியாக இருந்தால் பிரச்சனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். குறிப்பாக மேலதிகாரிகளை எதிர்த்து பேசாதீங்க.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். குடும்ப விஷயத்தை மட்டும் மூன்றாவது நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உறவினர்களிடம் கோபப்படாதீர்கள். கணவன் மனைவி இடையே வாக்குவாதம் கூடாது.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சிரமங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் தடுமாற்றம் அடைவீர்கள். மன தைரியத்தை வர வைக்க ஸ்ரீ ராம ஜெயம் மந்திரம் சொல்லுங்கள்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பான நாளாக இருக்கப் போகின்றது. எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கு உண்டான வேலைகள் நடக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறும். சந்தோஷம் அதிகரிக்கும். உங்களுடைய பெருந்தன்மையான மனப்பான்மை பாராட்டை வாங்கித் தரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மன நிறைவான நாளாக அமையும்.