அரசியலமைப்பு சபை இன்று (07) மீண்டும் கூடவுள்ளது.
கடந்த 25 மற்றும் 30ம் திகதிகளில் அரசியலமைப்பு சபை கூடியிருந்தது.
இன்றைய கூட்டத்தின் போது ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் புதிய முறை குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்க பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை அவகாசம் வழங்க முதல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர் ஒருவர் முன்மொழியப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான பிரேரணையும் இன்று கலந்துரையாடப்படவுள்ளது.