கொழும்பு – கண்டி வீதியின் பஸ்யால சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தொன்று சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
முன்னால் சென்ற வாகனம் திடீரென வேகத்தை குறைந்த நிலையில் பின்னால் வந்த பேருந்து தடுப்பானை இயக்கிய போது வாகனம் வீதியில் வழுக்கிச் சென்று முன்னால் வந்த கார் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது கார் பின்பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டு அருகில் இருந்த பாதுகாப்பு சுவரொன்றில் மோதி நின்றுள்ளது.
விபத்தில் கார் சேதமடைந்துள்ளதுடன் காரின் சாரதிக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
விபத்து ஏற்படும் போது வீதியில் சென்ற பாதசாரி ஒருவர் நூழிலையில் உயிர்தப்பியது அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் இவ்வாறு பதிவாகி இருந்தது.