கத்தி முனையில் அதிகாலையில் கொள்ளை பல இலட்சம் ரூபாய் பணம் மற்றும் பெருமளவிலான நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை திக்கம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 5 இலட்சம் பணம் மற்றும் 20 பவுண் நகைகள் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
முகமூடி அணிந்து நேற்று அதிகாலை வீடொன்றில் புகுந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் கொள்ளையடித்துள்ளனர்.
வீட்டின் கதவையுடைத்து உட்புகுந்த முகமூடியணிந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் தாக்குதல் நடத்தி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசேட குழு அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.