மாணிக்கக்கல் அகழ்வதற்கு சென்ற ஐவரில் ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
லுணுகலை எல்ரோட் அடாவத்தைப் பகுதியில் இருந்து மூன்று நபர்களும் அடாவத்தைப் பகுதியைச் சேர்ந்த இருவருமாக ஐவர் பிட்டமாறுவ தொரபொத்த சிறிய உலக முடிவு பகுதிக்கு மாணிக்கக் கல் அகழ்விற்காக 26 ஆம் திகதி சென்றுள்ளனர்.
முறைப்பாடு
இதில் சுவர்ணராஜா என்ற நபர் இன்றுவரை வீடு திரும்பாததால் சந்தேகம் கொண்ட உறவினர்கள் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து இவருடன் சென்ற ஏனைய நால்வரையும் கட்டையைச் லுணுகலை பொலிஸார் கைது செய்து விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் காணாமல் போன நபரைத் தேடும் பணிகளில் லுணுகலை பொலிஸாரும் ஊர் மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.