கடந்த 2022ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பதிவான வாகன விபத்துக்களில் மொத்தம் 2,485 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கடந்த வருடம் மொத்தம் 19,740 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இடம்பெற்ற விபத்துகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்களே அதிகம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதிவேகமாக வாகனத்தை செலுத்துவதாலே இந்த விபத்துக்கள் சம்பவிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்