நீரில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் தலவாக்கலை,மேல்கொத்மலை நீர்த்தேக்க பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அந் நபர் நேற்று (28) மாலை மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம்
நீர்த்தேக்க பகுதியின் வீதி ஓரத்தில் பை ஒன்று அனாதரவாக விடப்பட்டிருந்ததை வழியில் சென்ற மக்கள் அவதானித்து தலவாக்கலை பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு தேடிய போது நீர்த்தேக்கத்தி்ல் சடலம் ஓன்று மிதப்பதை அவதானித்து மீட்டுள்ளனர்.
அத்துடன் சடலமாக மீட்கப்பட்டவர் பத்தனை மவுண்ட் வர்ணன் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் சதீஸ் (வயது 27) எனவும் அடையாளம் கண்டுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.