மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குழப்பமான மனநிலை இருக்க வாய்ப்பு உண்டு. சாதகம் அற்ற அமைப்பு என்பதால் முக்கிய முடிவுகளை ஒத்தி வையுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் பிடிவாத குணத்தினை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப நெருக்கடியை சமாளிக்க வேண்டி இருக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன வரவு சிறப்பாக அமைய இருக்கிறது. குடும்ப ஒற்றுமை பற்றிய சிந்தனை மேலோங்கும். புதிய விஷயங்களை கையாளும் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழில் செய்பவர்கள் தேவையற்ற அலைச்சலை சந்திக்க கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் குறையும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆர்வம் எதிலும் அதிகரித்து காணப்படும். உங்களுடைய தன்னம்பிக்கையும், உற்சாகமும் முன்னேற்றத்தை கொடுக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் தேவையற்ற விவாதங்களை தவிர்த்து விடுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணம் சார்ந்த விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படக்கூடிய நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செய்யும் முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. திடீர் அலைச்சல் டென்ஷனை கொடுக்கலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அமைதியின்மை இருக்கும். பகைவர்கள் தொல்லை அதிகரிக்கும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத பண விரயம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அரசு வழி காரியங்களில் நினைத்தது நடக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முன்னேற்றம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உங்கள் மீதான மதிப்பு மாறக்கூடிய வாய்ப்பு உண்டு. பிரிந்து சென்றவர்கள் தானாகவே வந்து சேருவார்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுற்றி இருந்தவர்களுடன் கருத்து மோதல் ஏற்பட வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த முடிவுகள் காலதாமதம் ஆகலாம்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் புது எண்ணங்கள் தோன்றக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதிர்காலம் பற்றிய பயம் வந்து மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை தேவை. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசரப்படாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேற இடையூறுகள் வரலாம். சாதகமற்ற அமைப்பு என்பதால் பொறுமை தேவை. கணவன் மனைவியிடையே பிடித்த விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கடன் தொடர்பான உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் காணலாம்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் பொருட் சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உண்டு. தேவையற்ற கடன்கள் வாங்குவது தவிர்க்க வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்கள் வாகனம் ஓட்டும் பொழுது கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பொறுப்பு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நண்பர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக அமையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் மெல்ல மறையும். சுய தொழிலில் எதிர்பாராத பணப்புழக்கம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. செய்கின்ற முயற்சிக்கு எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். கணவன் மனைவியிடையே புரிதல் தேவை. பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துங்கள். சுய தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் செலவுகள் வரலாம் கவனம் வேண்டும்.