நுவரெலியா நானுஓயாவில் அண்மையில் பஸ், வேன் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 20ம் திகதி நுவரெலியா – ரதல்ல பகுதியில் பாடசாலை கல்வி சுற்றுலா சென்ற பஸ், வேன் மற்றும் முச்சக்கரவண்டி மோதியதில் 7 பேர் உயிரிழந்ததுடன், 50திற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.