வடக்கு பிரான்ஸில் தங்கியிருந்த 14 இலங்கையர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பல நாடுகளில் மனிதக் கடத்தல்
ஐரோப்பா உட்பட பல நாடுகளில் மனிதக் கடத்தல் செயற்பாடுகளை மேற்கொண்டமை காரணமாக அவர்கள் இவ்வாறு சிறை வைக்கப்பட்டனர்.
அதேவேளை இந்த மோசடியை மேற்பார்வை செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரான்ஸின் செரிபோன்டைன் கிராமத்தில் கடையொன்றை நடத்தி வந்த முக்கிய சந்தேக நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறையும், ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.