2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்குரிய சீருடைகள் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
இந்நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பாடசாலை சீருடைத் தேவையில் 70 வீதத்தை பூர்த்தி செய்ய சீன அரசாங்கம் இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனுடன் தொடர்புடைய முதலாவது தொகை சீருடை தொகையை சீன அரசாங்கம் நேற்று (13) கல்வி அமைச்சிடம் கையளித்துள்ளது.